Ad Code

Responsive Advertisement

தொடர்ச்சி

தொடர்ச்சி;(16.10.2014)
மலிவாக நடத்தப்பட்ட நலிவடைந்த பிரிவினர்:
கிரீமி லேயர்(CREAMY LAYER) எனப்படுவோர்
பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் செல்வந்தர்

இன்றைய காலகட்டத்தில், முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் அனைவரும் செல்வந்தர்களாக இல்லை என்பதைப் போலவே, பிற்படுத்த வகுப்பை சேர்ந்த மக்கள் அனைவரும் ஏழைகளாக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

மண்டல் ஆணைக்குழு இந்தியாவில் 1979 ஆம் ஆண்டில் ஜனதா கட்சி அரசின் கீழ் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயால் "சமூக ரீதியாக அல்லது கல்விரீதியாக பின்தங்கியவர்களை அடையாளம் காணுவதை" கட்டாயம் ஆக்குவதற்காக நிறுவப்பட்டது. அந்த ஆணைக்குழுவுக்கு இட ஒதுக்கீடுகளுக்காகவும் சாதிப் பாகுபாடுகளை சீராக்குவதற்கான ஒதுக்கீடுகளுக்காகவும் பாராளுமன்ற அறிவாளர் பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் தலைமை வகித்தார்.

மண்டல் ஆணைக்குழு ஒ.பி.சி.க்களை அடையாளம் காணுவதற்காக சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று தலைப்புகளைக் கொண்ட பிரிவுகளைக் கொண்டிருந்தது.

சமூகம்
(i) மற்றவர்களால் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டோராகக் கருதப்படும் சாதிகள்/வகுப்புகள்.

(ii) அவர்களது வாழ்வாதாரத்திற்காக உடல் உழைப்பை முக்கியமாக சார்ந்திருக்கும் சாதிகள்/வகுப்புகள்.

(iii) கிராமப்புறப் பகுதிகளில், மாநில சராசரிக்கும் மேலாக, குறைந்த பட்சம் 25 சதவீத பெண்களும், 10 சதவீத ஆண்களும் மற்றும் நகரப்புறப் பகுதிகளில் குறைந்த பட்சம் 10 சதவீத பெண்களும் 5 சதவீத ஆண்களும் 17 வயதுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் சாதிகள்/வகுப்புகள்.

(iv) பெண்களில் குறைந்த பட்சம் 25 சதவீதம் மாநில சராசரிக்கும் அதிகமாக பணியாற்றுபவர்கள் கொண்ட சாதிகள்/வகுப்புகள் போன்ற முறைகளில் அவர்களை அடையாளம் காணலாம்.

கல்வி
(v) 5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களில், மாநில சராசரியைவிட அதிகமாக, குறைந்த பட்சம் 25 சதவீதமான பள்ளிக்குச் செல்லாதவர்களைக் கொண்ட சாதிகள்/வகுப்புகள்.

(vi) 5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களில், குறைந்த மாநில சராசரியைவிட அதிகமாக, குறைந்த பட்சம் 25 சதவீதமான பள்ளியில் இருந்து பாதியில் நின்றுவிடும் வீதத்தைக் கொண்ட சாதிகள்/வகுப்புகள்.

பொருளாதாரம்
(viii) குறைந்த பட்சம் 25 சதவீதமான குடும்பங்களின் குடும்பச் சொத்துக்களின் சராசரியானது மாநில சராசரியைவிடக் குறைவாகவுள்ள சாதிகள்/வகுப்புகள்.

(ix)
மாநில சராசரிக்கும் மேலாக, குறைந்த பட்சம் 25 சதவீதம் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்கள் கொண்ட சாதிகள்/வகுப்புகள்.

(x) 50
சதவீதத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் குடிநீருக்காக அரை கிலோ மீட்டருக்கும் அப்பால் செல்லும் நிலையிலுள்ள சாதிகள்/வகுப்புகள்.

(xi)
கடனைப் பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையானது, மாநில சராசரிக்கும் மேலாக குறைந்த பட்சம் 25 சதவீதமாகவுள்ள சாதிகள்/வகுப்புகள்மேலும் "கிரீமி லேயர்" (பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர்) என அறியப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களை அரசு புறக்கணித்ததால் அது மிகவும் சர்ச்சைக்குரிய ஒதுக்கீட்டுச் சிக்கலாக அறியப்படுகிறது.

ஏனெனில் கிரீமி லேயர்-ன் வாக்கு வங்கியால் அரசு அமைக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோமே என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கு மேலோங்கியாருந்தது.

கட்டமைப்பு மாற்றங்கள்
அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடுகள் மற்றும் சாத்தியமுள்ள நிதி உதவி போன்றவை தொடர்ந்து பின்தங்கிய நிலை அதன் மூலங்களின் சிக்கல்களில் இருந்து விடுபடும் வரை வெறும் தற்காலிகத் தணிப்பானாக இருக்கும்.
மண்டல் ஆணைக்குழுவில் இருந்த ஒரே தலித் உறுப்பினரான எல். ஆர். நாயக் (L R Naik) மண்டல் பரிந்துரைகளில் கையெழுத்திட மறுத்தார் மேல்மட்ட .பி.சி.க்கள் மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பினர்கள் (MBCக்கள்) ஆகிய இரண்டு சமூகத் தொகுதிகள் .பி.சி.க்களில் இருக்கின்றனர். அவர் ஒதுக்கீட்டின் அனைத்து நன்மைகளையும் மேல்நிலை .பி.சி.க்கள் பெற்றுவிடக்கூடும் என்று பயப்படுவதாகக் கூறினார்.

ஆணைக்குழுவின் பரிந்துரையின் முழுமையான திட்டங்களின் செயல்படுத்தும் காலம் தொடர்பாக இருபது ஆண்டுகள் கழித்து திறனாய்வு செய்யப்படும். இந்த ஒரு தலைமுறையின் இடை நீளத்தில் சமூக விழிப்புணர்வை உயர்த்துதல் தலைமுறைச் செயல்பாடாக இருப்பதற்கு நாம் அறிவுறுத்துகிறோம்.

மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படியும், உச்சமன்றத்தின் வற்புறுத்தலையும் ஏற்றுக்கொள்ளாத மாநில அரசுகள், இதுவரை இந்திய அரசு அமல்படுத்தும் எல்லவித சலுகைகளையும் அநுபவித்து வரும்  "கிரீமி லேயர்" (பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர்) என அறியப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த செல்வந்தர்களை பட்டியலிருந்து நீக்கவதற்க்கு எந்த மாநில அரசும் முன் வரவில்லை. ஏனெனில் அவர்களின் வாக்கு வங்கி அரசு அமைக்க எதிர்விளைவை தந்து விடும் என்ற சுயநலம் என்றே கூறலாம்.

உச்சநீதி மன்றத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 50% (தமிழ்நாடு 69%) மிகாமல் இட ஒதுக்கீடு மற்றும் "கிரீமி லேயர்" பட்டியலிருந்து நீக்கவதற்க்கான வழக்கு நிலவையில் தான் உள்ளது. இது வரை மாநில அரசு முறையான விளக்கத்தை நீதிமன்றத்திற்க்கு சமர்பிக்காமலே உள்ளது


A ALEXANDER SOLOMON

Post a Comment

0 Comments