03.09.2014 அன்று சன் நியூஸ் விவாதமேடை
சன் செய்தி விவாத
நடுவர்.
1.
தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா?
2. பொருளாதார, சமூக காரணங்களால் மதிப்பெண்ணை
இழந்தவர்களுக்கு உங்கள் WTGE வேலை கொடுக்கவில்லை என்றால்
இந்த முறையை எப்படி சரி
என்று சொல்வீர்கள்.
3. கல்வியின் தரத்தை,
மதிப்பெண் தரத்தை எப்படி பிரிப்பீர்கள்.
4. B.Ed-டே ஆசிரியராக தகுதி
இருக்கம் போது, TET தேவையா?
5. கல்வியின் தரம் அடுத்த தலைமுறைக்கு உயர்ந்ததாக இருக்க
வேண்டும்.
6. WTGE எனபது தரமான திறமையான
ஆசிரியர்களை நியமிக்கவே.
7. அரசின் எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.
8. WTGE-ல் பாதிக்கப்பட்ட
ஆசிரியர்கள் 20 ஆண்டுக்கு முன் இருந்த
தேர்வு முறையிலும் விடைத்தாள் திருத்தும் முறையிலும் இருந்த
குளறுபடிகளை மேற்க்கோல் காட்டுகிறார்கள்.
9. திரு புருசோத்மன் அவர்களை கேட்ட கேள்வி.
10-ம் வகுப்பில், 12-ம் வகுப்பில், பட்டபடிப்பிலும் மற்றும்
பட்டயபடிப்பிலும் (B.Ed) தன்னை தகுதி படுத்தாத
ஒருவர், TET-ல்
132/150 மார்க் எடுக்கிற வய்ப்பு
இருக்கிற பையனை, 10-ல் நீ சரியாக
படிக்க வில்லை அதனால் நீ பாடம் நடத்தாதே என்கிறதும், இறந்த
காலத்தில் போய் உன் மதிப்பெண்ணை மாற்று என்பதும்,
காலசக்கரத்தில் உங்க கடிகாரத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள்.
10. சீனியாரிட்டி முறையில் தேர்ந்து எடுத்து பாடம் சொல்லிக்
கொடுத்து கற்று வந்த நாம், வளராமலா இருக்கிறோம்.
11 10-ம் வகுப்பில் 40 மார்க் வாங்கியவர், பெரிய சயின்டிஸ்ட் ஆகவும்
. வாய்ப்பு உள்ளது.
12. அரசாங்கம் ஒரு எல்லைக்கோடு வைத்தாக வேண்டும், அதை
நகர்த்திக்கொண்டே போ என்று சொல்வதில் என்ன நியாயம்
இருக்கிறது.
திரு செல்லதுரை, ஆசிரியர் TET 2013 சங்க தலைவர்.
1. WTGE- முறையை அறவே ஒழிக்க
வேண்டும்.
2. தகுதி தேர்வு
அடிப்படையில் பணிநியமனம்.
3. 0.01 மதிப்பெண்
வித்தியாசத்தில் 200 பேர் உள்ளார்கள்.
4. Education ystem மாறிக்கொண்டே இருக்கிறது, Valuationம் காலத்திற்க்கு
காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது.
5. பந்தயத்தில் ஓடிவந்து நின்று பரிசைக்கேட்டால், நடந்து
வருபவர்களுக்கு பரிசை கொடுப்பது ஏன் என்று கேட்டால், அவன்
இரண்டு மூன்று நாட்களுக்கு முன் நல்லா ஓடினான் என்றும்
இப்பத்தான் அவனால் ஓட முடியவில்லை
என்பதும் எப்படி
நியாயம்.
6. இந்த போராட்டம் காலம் கடந்து நடத்துவது இல்லை. 4
மாத்ததிற்க்கு முன்பே போட்ட வழக்கிற்க்காக காத்திருக்கும் போது,
வழக்கு எண் 707 மற்று 708 – ன் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று
PROVISIONAL
LIST –ஐ விட்டு விட்டு லீவு
டைமில் பணிநியமன
ஆணையை வழங்குகிறார்கள். அதனால் தான் போராட்டத்தை
வழுப்படுத்துகிறோம்.
7. மருந்து குடிப்பது கோழைத்தனம் என்கிறார்கள், சேர, சோழ,
பாண்டியர்கள், கழுத்தை அறுத்து செத்திருக்கிறார்கள். அதெல்லாம்
என்ன கோழைத்தனமா??
8. +2 எழுதுவதற்க்கு 10th தகுதி,
பட்ட படிப்புக்கு +2
தகுதி,
பட்டய(B.Ed) படிப்புக்கு பட்ட படிப்பு தகுதி,
TET-க்கு பட்டய(B.Ed) படிப்பு தகுதியாக
இருக்கும் போது பிறகு எதற்க்கு +2, பட்ட படிப்புக்கு, பட்டயபடிப்புக்கு
மற்றும் TET க்கு தனித்தனியாக
மதிப்பெண் கணக்கிட வேண்டும்?
9. தகுதி பெற்ற ஆசிரியருக்கு எதற்கு தகுதி.
10. ஒரே கால கட்டத்தில் அனைவரும் TET தேர்வு எழுதி
தேறிவிட்டோம். எனவே TET மதிப்பெண் முறையில்
பணிநியமனம் எனபதே சாலசிறந்தது.
11. WTGE என்பது வரலாற்று பிழை,
எங்களுக்கு தோண்டபட்ட குழி
திரு புருசோத்மன்
கல்வியாளர்.
1. ஒரு ஆசிரியருக்கு CONSISTENCY IN PERFORMANCE
இருக்க
வேண்டும்.
2. ஆசிரியர் திறமையை மாணவர்களுக்கு TRANSFORM செய்யக்கூடியவர்
அவருக்கு ADDITIONAL
PARAMETER நிர்ணயம் செய்வதில்
என்ன தவறு.
3. நல்ல ஆசிரியாராக திறமை எப்படி இருக்க வேண்டும், 10th, +2, DEGREE,
B.Ed களில் நல்ல மதிப்பெண்
எடுத்திருந்தால் மட்டுமே.
4. வேலை இன்று பறிகொடுக்க வில்லை, அடுத்த TET-ல் பாஸ் செய்து
வேலை வாயப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்
5. அரசு பள்ளிகளில் வேலை பெறுவதற்க்கு துடிப்பது காரணம் ஓய்வு
எடுப்பதற்க்கு தான். தலைமை ஆசிரியர் MEMO கொடுத்தால் உள்ளூர்
கவுன்சிலரை வைத்து
தலைமை ஆசிரியரை மிரட்டுகிறார்கள்.
6. இந்த WTGE முறையில் குறைபாடு
இருக்கிறது என்று
ஒத்துக்கொள்கிறேன்.
7. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவருக்கு ஒரு தீர்வு
வேண்டும்.
8. WTGE என்பது கூடுதல் திறமைகளை
சோதிப்பது தான்.
திரு பிரின்ஸ்
கஜேந்திரன், கல்வியாளர்.
1. NCTE ஐ அரசு சரியாக உள்
வாங்கிக் கொள்ளவில்லை.
2. பள்ளி படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்க்கு வந்த பிறகு, தரம்
உயர்ந்த பிறகு குறைந்த பட்சம் கல்வி தகுதி மதிப்பெண்ணிற்க்கு
WTGE கொடுக்க சொல்லி யாரும்
சொல்லவில்லை. SLET, NET-ஐ ப்
போலத்தான் TET-ம் என்று முதல் அமைச்சர்
சட்டசபையில்
உண்மையெனில், TRB ஏன் இந்த குழப்பத்தை
ஏற்படுத்திருக்கிறது.
3. அமைச்சர் தலைமையில் அதிகாரிகளைக் கொண்ட நால்வர் குழு,
இதில் கல்வியாளர்கள்
என்று யாரும் இல்லை.
4. EXCUTIVE
ORDER / POLICY DECISION சட்டத்தின் மூலமாகவோ அல்லது
நீதித்துறை மூலமாகவோ இதை தீர்க்க முடியாது.
5. 40 பேர் படிக்கும் வகுப்பில் 2 பேர் கற்றல் குறைபாடு எப்படி
கண்டுபிடிப்பது. பின் பாகுபாடில்லாமல் 40 பேருக்கும் போதிப்பது
எப்படி??? என்ற கேள்விகள் ஆசிரியர்
திறமையை சோதிக்க
கூடியது. மணப்பாடம் செய்து பதில் எழுதுவது என்பது எவ்வாறு
ஆசிரியர் திறமையை
சோதிக்கும்??
6. TET என்பது ஆசிரியரின்
திறமையை சோதிப்பதாக இல்லை,
நினைவாற்றலை சோதிப்பதாகத்தான் கேள்விகள் அமைந்துள்ளன.
7. 14 வயதலிருந்து – 18 வயது வரை EGO தலை தூக்கி இருக்கும்
வயது, புரிதல் சக்தி
குறைவாகத்தான் இருக்கும்.
8. மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கார் பள்ளி படிப்பு எப்படி இருந்த்து.
மகாத்மா காந்தி பாரிஸ்டர் பட்டம் வாங்க வில்லையா??.
அம்பேத்கார் அவர்கள் இரண்டு DOCTORATE வாங்க வில்லையா???
இருவரும் SCHOOL AVERAGE STUDENT எனபதால் அவர்கள் வாங்கிய
பட்டங்கள் இல்லை என்று
சொல்ல முடியுமா????
9. புரிதல் இல்லாத வயதில் பள்ளிப்படிப்பை முடித்து தன் தகுதியை
மேன்படுத்திக்கொண்டு மேல்படிப்பை முடிக்கும் ஒருவருக்கு
என்பது எந்த விதத்தில்
நியாயம்.
10. ஆசிரியர் என்பவர் அறிவியலையோ, கணிதத்தையோ,
மொழியையோ சமூகத்துடன் இணைத்து மாணவனை நல்ல
1. குடிமகனாக
உருவாக்ககூடியவர்.
11. TER +
SENIORITY+TEACHING PRACTICE என்பதை WTGE-ல் கணக்கில்
கொள்ளலாம்.
12. நீண்ட கால தீர்வுக்கு ஒரு அளவுகோலை அரசு உருவாக்க
வேண்டும்.
1. நிலையான கல்வி அமைச்சர் இல்லை
2. நிலையான கல்வி கொள்கை இல்லை
3. கல்வி அமைச்சருக்கு என்ன நடக்கிறது எனபது
தெரியவில்லை.
4. காலத்திற்கு ஏற்ப மதிப்பெண் வேறுபடுகிறது.
5. வல்லுனர் குழுவை அமைத்து பிரச்சனையை கலைய வேண்டியது
அரசின் கடமை.
6. போட்டி தேர்வு எனபதும் அகடமி தேர்வு எனபதும்
வேறு
விடைத்தாள் மதிப்பீட்டை கவனத்தில் கொள்ளும் போது,
வேறு.
7. அரசிடம் சரியான அனுகுமுறை இல்லை.
8. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய TET என்பது தேவை
தான்
9. WTGE முறையில் சீர்திருத்தம்
தேவை.
10. விடைத்தாளை திருத்துவதில் இரு வேறு ஆசிரியர்களுக்கும் ஒரே
ஒற்றுமை இருக்காது. ஒரே மதிப்பெண் வழங்க முடியாத
அதனடிப்படியில் WTGE கணக்கிடுவது நிச்சயமாக
அநீதி இழைக்கும்
செயல். ஒரே மதிப்பீடு என்று சொன்னால் WTGE-ல் அர்த்தம்
இருக்கும். ஆகவே மதிப்பெண் மதிப்பீட்டில் குறைபாடு உள்ள
இந்த WTGE-ஐ ஆசிரியர் தகுதி
தேர்வுக்கு எடுத்துக்கொள்வது
இயற்க்கைக்கு முறனான செயல் ஆகும்.
0 Comments