TET-2013 திறமைக்கு அளவுகோல் என்ன???
ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்ற
பட்ட நடைமுறைகளில் எதை திறமை என்ற அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்?
1.
நினைவு ஆற்றலை சோதிப்பதாலா?
2.
OC-ல் 89 மதிப்பெண் பெற்று
தோல்வியை தழுவியவர்கள் எந்த விதத்தில் திறமை அற்றவர்களானார்கள்??
3.
படிப்பு அறிவு இருந்தால் மட்டும்
ஒருவர் திறமையானவரா??
:- அறிவும், பயிர்ச்சியும்
மட்டுமே ஒருவரை திறமை உள்ளவராக உருவாக்க முடியும்
:- அறிவும் பயிர்ச்சியும்
பெற்று ஒன்றை ஒழுங்கு செய்யும் திறனே திறமை
:- திறமைக்கு அளவுகோல்
அறிவு, பயிர்ச்சியும் மட்டுமே.
:- பயிர்ச்சி என்பது அனுபவத்திலே
மட்டுமே பெறமுடியும்.
:- அறிவு இங்கே
இருக்கிறது, திறமை (அனுபவம்) ?????
எந்த பணிவாயப்பை தேடி சென்றாலும் முன்
அனுபவத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலகட்டத்தில், எதிர் கால மாணவர்களின்
முன்னேற்றத்தின் கருவிகளான ஆசிரியர்கள் பணிநியமனத்திற்க்கு மட்டும் முன்அனுபவம்
மறுக்கப்படுகிறது. வரும் காலங்களில் அரசின் கொள்கை முடிவில் மாற்றம் வரும் என்று
நம்புவோம்
சாதகமான சூழல் இல்லாத போது தான் பிரிவினை வருகிறது.
வருவதை ஏற்றுக்கொண்டால், நாம் வளம் பெறுவோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்
நம் அனைவருக்கும் இல்லை. இந்த மனப்பக்குவம் மட்டும் இருந்தால் பிரிவினை என்ற கொடிய
நோய் நம்மை தீண்டி இருக்காது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அரசும் நீதி
மன்றத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறது என்பதை உணர மறுக்கிறோம்.
வேலைவாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர்
வாழக்கையின் முன்னேற்றத்திற்க்கு எவ்வளவு இன்றியமையாதது என்று யாவரும் அறிந்ததே.
அதற்காகத்தானே இத்தனை போராட்டங்கள்.
இன்றைய சூழலில் காலச்சக்கரம் சாதகமாக சுழலுகிறது
என்பதற்க்காக சுயநலம் தலைத்தோங்க எவரையும் எடுத்தெரிந்து பேசுவோர்கள். அதே
காலசக்கரம் எதிராக சுழலும் போது, நீங்கள் வீசிய சுடு சொற்க்கள் பூமரேங்க் போல எய்தவனிடமே
வந்து சேரும் எனபதை மறவாதீர்கள்.
TET-ல் ஒவ்வொரு மதிப்பெண்
பெறுவது எவ்வளவு கடினம் என்பது, என்னை விட தேர்வு எழதிய உங்கள் அனைவருக்குமே
தெரியும். இவ்வளவு கடினப்பட்டு எழுதி மதிப்பெண் பெற்ற தேர்வுக்கு 60 சதவிகிதம் ஒதுக்கியது
சரியா?? தவறா ???. உங்கள் மனசாட்சியை தொட்டு நீங்களே சொல்லுங்களேன்?????.
யாருடைய வேலையையும் யாரும் தட்டி பறித்து போகமுடியாது
என்பதை படித்தவர்களே உணர மறுக்கிறோம். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது
அதே நேரத்தில் கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்ற நிதர்சனமான உண்மையை
உணர்ந்து நண்பர்களாகவே இருப்போம்.
நமக்கும் மேலே ஒருவனடா
– அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞனடா
அவனை மீறி எதுவும் நடக்காது
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞனடா
அவனை மீறி எதுவும் நடக்காது
இதை எழுதும் போது மன வேதனையோடுதான் எழுதுகிறேன்.
யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இதை எழுதவில்லை.
ஆறு கரையில் அடங்கி
நடந்திடில்
காடு வளம் பெறலா..ம்
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலா..ம் நாடும் நலம் பெறலா..ம்
காடு வளம் பெறலா..ம்
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலா..ம் நாடும் நலம் பெறலா..ம்
யாரையாவது புண்படித்திருந்தால் மன்னிக்கவும்
என்றும் உங்கள் நண்பன்
A ALEXANDER SOLOMON
0 Comments